TVH Titanium City

நீங்கள் விரும்பும் உங்கள் கனவு இல்லம்!

வீடு என்பது செங்கல்லும், மணலும் கொண்டு வடிவமைக்கப்படுவது மட்டுமல்ல, உணர்வுபூர்வமாக ஒருவர் மனத்துக்கு நெருக்கமாக இருக்கும் ஓர் இடம்; அதனால்தான் அதை இல்லம் என்றும் சொல்கிறோம். அப்படி ஒவ்வொரு மனிதனுக்கும் தன்னுடைய கனவு இல்லத்தைப் பற்றிய கற்பனை நிச்சயம் இருக்கும். அந்தக் கனவுகளை நிஜமாக்கித் தருகிறது ட்ரூ வேல்யூ ஹோம்ஸ் (TVH). 1997 ஆம் ஆண்டு முதல் 8 மில்லியன் சதுர அடியில் குடியிருப்புகள் மற்றும் வணிக வளாகங்கள் அமைத்துக் கொடுத்திருக்கிறார்கள். சுருங்கக் கூறினால் 4000-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு மனநிறைவை அளித்திருக்கிறார்கள்.

ISO 9001:2000 & ISO 14001:2004 சான்றிதழ் பெற்ற இந்த நிறுவனம் பல்வேறு சிறப்புகளைக் கொண்டுள்ளது. முதன்முதலில், 30 மாடிகளைக் கொண்ட சென்னையின் மிக உயரமான அடுக்குமாடிக் குடியிருப்பை வடிவமைத்தது, கோவையில் மிகப்பெரிய குடியிருப்பு மற்றும் சென்னையின் பசுமை வீடுகளை முதன்முதலில் வடிவமைத்த பெருமை என பல்வேறு சிறப்புகளைக் கூறலாம். தரத்திற்கு இவர்கள் கொடுக்கும் முக்கியத்துவமும், சிறப்பான வடிவமைப்பும், நம்பகத்தன்மையுமே ட்ரூ வேல்யூ ஹோம்ஸ் (TVH) மீது மக்களுக்கு நன்மதிப்பு உண்டாகக் காரணமாகும்.

கட்டடக் கலையில் இருபது வருடங்கள் பெற்ற அனுபவங்கள், ட்ரூ வேல்யூ ஹோம்ஸின் (TVH) கட்டடத் தொழில்நுட்பத்திலும், வடிவமைப்பிலும் வெளிப்படுகிறது. இவர்கள் கட்டுமானத்தில் பயன்படுத்தும் அலுமினியம் ஃபிரேம்ஒர்க் டெக்னாலஜி கொண்டு உருவாக்கப்படும் சுவர்கள் காலத்தை கடந்தும் உறுதியாக நீடித்து நிலைத்திருக்கவல்லது. கட்டடம் கட்ட தரமான பொருள்களைப் பயன்படுத்துவதாலேயே மக்கள் கொடுக்கும் பணத்திற்கு ஏற்ற மதிப்புடன் விளங்குகிறது. இதனாலேயே இதை ட்ரூ வேல்யூ ஹோம் என்று அழைப்பது பொருத்தமாக அமைகிறது. மேலும் எதிர்காலத்தில் வரக்கூடிய மாற்றங்களை முன்கூட்டிய திட்டமிட்டு கட்டப்படுவதால் இந்தக் கட்டடங்கள் பல வருடங்களுக்குப் பிறகும் லேட்டஸ்ட்டாக இருப்பதில் வியப்பேதுமில்லை.இதுவே மற்ற பில்டர்களிலிருந்து TVH தனித்து சிறப்புடன் விளங்கக் காரணமாகவும் அமைந்துள்ளது.

ட்ரூ வேல்யூ ஹோம்ஸ் (TVH) தன்னுடைய 20-வது ஆண்டைக் கொண்டாடும் விதமாக, தற்போது கட்டுமானத்தில் இருக்கும் புரோஜக்ட்களுக்கு ஸ்பெஷல் ஆஃபர்கள் அளிக்கப்படுகின்றன. சலுகை விலை, கஸ்டமர்களுக்கு ஏற்ற பேக்கேஜ் முறையில் செய்து தருவது, HDFC, SBI வங்கிகளில் தள்ளுபடி டீல்கள் என வீடு வாங்குபவர்களுக்கு ஏராளமான வசதிகளை செய்து தருகிறது TVH. அடையாரில் Quadrant Ultra Luxury Project, கோவையில் TVH விஸ்தா வில்லாஸ் மற்றும் விஸ்தா ஹைட்ஸ் குடியிருப்புகள், தாம்பரம் மன்னிவாக்கம் அருகே 100 ஏக்கரில் பிளாட்டுகள் கொண்ட டைட்டானியம் சிட்டி புராஜெக்ட் என பல்வேறு புரோஜக்ட்டுகள் தற்போது விற்பனைக்கு உள்ளன. விரைவில் சென்னை ஓஎம்ஆர் சாலை மற்றும் கோட்டூர்புரத்தில் அழகே வடிவமைக்கப்பட்டு வரும் குடியிருப்புகள். மக்களுக்கு வாங்குவதற்கு ஏதுவான விலையில் குடியிருப்புகள் கட்டப்பட இருக்கின்றன.

CMDA அனுமதி பெற்ற டைட்டானியம் சிட்டி புராஜெக்ட், 20 ஆண்டுகால நம்பிக்கை, அனுபவம், கட்டுமானப் பொருட்களின் தரம், Futuristic Forecast புரோஜக்ட்ஸ், 20-வது ஆண்டின் சலுகைகள் என TVH-ன் தனிச்சிறப்புகள் உங்கள் கனவு இல்லத்தை தேர்ந்தெடுக்க சிறப்பான தேர்வாய் அமைகிறது. உங்கள் குடும்பத்துடன் மகிழ்ச்சியாய் வாழ சிறந்த இல்லத்தைத் தேர்ந்தெடுக்க வாழ்த்துகிறது ட்ரூ வேல்யூ ஹோம்ஸ் (TVH)!